Dear devotees and well-wishers, On Thursday, 17.09.2026, during the auspicious Thula Lagna from 8.07 a.m. to 10.07 a.m., with the Hasta Nakshatra and Siddha Yoga, the Balasthapana Kumbabhishekam of Lord Koneswarar with Goddess Mathumai Ambal was conducted with the divine blessings of the Lord. As part of the sacred ceremonies, on Wednesday, 16.09.2026, the rituals commenced at 5.30 a.m. with Vinayaka worship, Punyahavachanam, Angurarpanam, Ganapathi Homam, Vasthu Shanthi and Go Pooja. At 3.30 p.m., further ceremonies were conducted, including Vinayaka worship, Prasanna Abhishekam, Prasanna Pooja, Mrithsangiranam, Rakshabandhanam, Kadasthapanam, Deepasthapanam, Kalakarshanam, Kooshmanda Homam, Kumbha Yaga Shala Pravesam, Yaga Pooja, Poornahuthi, Veda Stotra Thirumurai recitation and distribution of Prasadam. On Thursday, 17.09.2026, the ceremonies resumed at 5.30 a.m. with Vinayaka worship, Punyaham, Bimbasuddhi, Yaga Pooja, Dravya Homam, Maha Poornahuthi, Veda Stotra Thirumurai recitation and Kumbham Veethi Pradakshinam. The Balasthapana Kumbabhishekam was then conducted from 8.07 a.m. to 10.07 a.m., followed by special pooja and distribution of Prasadam. Maha Kumbabhishekam Renovation Works The Maha Kumbabhishekam festival is planned to be conducted on an auspicious day in the Tamil month of Thai in 2027. As renovation works need to be completed with the divine grace of the Lord, devotees who wish to provide financial or material assistance are kindly requested to participate in the renovation works and receive the blessings of Lord Koneswarar. Thirukoneswaram Kovil Paripalanasabai Office: 9426 222 6888, 9476 766 5280

சிவநேயச் செல்வர்களே! ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான பராபவ வருடம் ஆவணி மாதம் 31ம் நாள் வியாழக்கிழமை (17.09.2026) அன்று நடைபெற்ற இவ்விழாவில், ஹஸ்த நட்சத்திரம், சித்த யோகமும் கூடிய காலை 08.07 மணி தொடக்கம் 10.07 மணி வரையுள்ள துலா லக்கின சுபவேளையில், அருள்மிகு மாதுமை அம்பாள் சமேத கோணேஸ்வரப் பெருமானுக்கு எம்பெருமான் திருவருளால் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவிழா கிரியைகளின் ஒரு பகுதியாக 16.09.2026 புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பூஜையைத் தொடர்ந்து விநாயக வழிபாடு, புண்ணியாஹவாசனம், அங்குரார்ப்பணம், கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, கோ பூஜை ஆகிய கிரியைகள் நடைபெற்றன. அன்று மாலை 3.30 மணிக்கு விநாயகவழிபாடு, பிரசன்னாபிஷேகம், பிரசன்னபூஜை, மிருத்தசங்கிரணம், இரட்சாபந்தனம், கடஸ்தாபனம், தீபஸ்தாபனம், கலாகர்ஷணம், கூஷ்மாண்ட ஹோமம், கும்பயாக சாலாபிரவேசம், யாகபூஜை, பூர்ணாஹுதி, வேத ஸ்தோத்திர திருமுறை சம்புடபந்தனம் மற்றும் பிரசாதம் வழங்கல் நடைபெற்றது. 17.09.2026 வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு விநாயகவழிபாடு, புண்ணியாஹம், பிம்பசுத்தி, யாக பூஜை, திராவிய ஹோமம், மகா பூர்ணாஹுதி, வேத ஸ்தோத்திர திருமுறை சம்புடபந்தனம், கும்பம் வீதி பிரதக்ஷணம் ஆகிய கிரியைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 8.07 மணி முதல் 10.07 மணி வரை பாலஸ்தாபன கும்பாபிஷேக தசத்ராவணம் இடம்பெற்று, விசேட பூஜையும் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மகாகும்பாபிஷேகத் திருப்பணிகள் மகாகும்பாபிஷேகப் பெருவிழாவினை 2027 தைமாத சுபமுகூர்த்த நாளில் நடத்துவதற்கு எம்பெருமானின் திருவருள் துணையுடன் திருப்பணி வேலைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளதால், நிதியுதவி, பொருளுதவி வழங்க முன்வரும் அடியவர்கள் திருப்பணிகளில் பங்குபற்றி எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம். சிவப்பணியில் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை அலுவலகம்: 9426 222 6888, 9476 766 5280